திட்டமிட்டபடி ஜிசாட்-29 செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படும்- இஸ்ரோ

திட்டமிட்டபடி ஜிசாட்-29 செயற்கைக்கோள் நாளை மாலை 5 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட், திட்டமிட்டபடி நாளை மாலை 5 மணி 8 நிமிடத்தில் விண்ணில் செலுத்தப்படும் என சிவன் தெரிவித்தார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தும்போது, கஜா புயல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 400 நாட்டிக்கல் மைல் தொலைவில் இருக்கும் என்றும், புயல் திசை மாறும்பட்சத்தில் ராக்கெட் செலுத்துவது ஒத்திவைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜிசாட்-29 செயற்கைக்கோள், தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version