ராமநாதபுரம் மாவட்டம் நெல்மடூரில் 8 அடிக்கு வளர்ந்துள்ள தக்காளி செடியைபெண் ஒருவர் பாதுகாத்து வருகின்றனர்.
பரமக்குடி அருகே நெல்மடூரை சேர்ந்த ராணி என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு முன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தக்காளிச் செடி ஒன்று முளைத்துள்ளது. இரண்டு மாதங்களில் அந்த தக்காளிச் செடி 8 அடி முதல் 9 அடிக்கு மேல் வளர்ந்து காய் காய்த்து வருகிறது. இதனைக் கண்ட ராணி தக்காளிச் செடியை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாத்து வருகிறார். தினசரி ஒரு கிலோ வரை தக்காளி பழங்களை பறித்து வருவதாகவும், தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருக்கும் இந்தச் செடியை அவ்வழியே செல்லும் மக்கள் வேடிக்கை பார்த்து செல்வதாகவும் ராணி கூறுகிறார்.