முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால் முதல் போகத்தில் நெற்பயிர்கள் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு அதிகப்படியாக நீர் வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வரை தமிழக பகுதிக்கு நீர் திறந்துவிடப்பட்டது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரத்து 700 கனஅடி நீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டது. இதனால் கம்பம் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் அனைத்தும் வளர்ந்து கதிர் விட்டு உள்ளது.
இதனால் இந்தாண்டு முதல் போகத்தில் அதிகப்படியான மகசூல் எடுக்கலாம் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். விரைவில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கும் என்பதால் இரண்டாம் போக சாகுபடியும் சிறப்பாக அமையும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளனர்.