புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்த குழு அமைப்பு- உயர்நீதிமன்றம்

குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்துவது குறித்து பரிந்துரை வழங்குவதற்காக 5 பேர் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்க கூடிய வழக்குகள், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்க கூடிய வழக்குகள் மற்றும் ஆயுள் தண்டனை வழங்க கூடிய வழக்குகளின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது

2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2018-ல் குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்துவதற்கும், குற்றவாளியின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்கு தேவையான நடைமுறைகளை கண்டறியவும் குழு அமைத்து உத்தரவிட்டார். முன்னாள் காவல் ஆணையரும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வுமான ஆர். நடராஜ், ஒய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் சித்தண்ணன், மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ, பேன்யன் அமைப்பின் இயக்குனர் கிஷோர் குமார், அண்ணா நகர் காவல் துணை ஆணையர் சுதாகர் அடங்கிய குழுவை அமைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version