குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, இடைத்தரகர் முகப்பேர் ஜெயக்குமாரின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை, சிபிசிஐடி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை முகப்பேரில் உள்ள ஜெயக்குமாரின் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர், மடிக்கணினி, பென்டிரைவ், 60க்கும் மேற்பட்ட பேனாக்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெயக்குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களில் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனிடையே, முகப்பேர் ஜெயகுமார் குறித்து தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதுடன், சன்மானம் வழங்கப்படுமென காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.