பொன்னேரி பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, நிலத்தடி நீர் திருட பயன்படுத்திய பத்து ராட்சத மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளி, கொக்கு மேடு, காணியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக ஆழ்துளைக் கிணறு அமைத்து ராட்சத மோட்டார் மூலம் நிலத்தடி நீர் திருடி விற்கப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதையடுத்து கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, நிலத்தடி நீர் திருட பயன்படுத்திய 10 ராட்சத மோட்டார்களை பறிமுதல் செய்தனர். இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சோழவரம், மீஞ்சூர் ஆகிய காவல் நிலையங்களில் புகார் மனு அளித்தனர்.