வந்தவாசி அருகே குடிமராமத்து திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

வந்தவாசி அருகே குடிமராமத்து திட்டத்தின் மூலம் குளம் தூர்வாரப்பட்டு நீர் நிரம்பி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் குளத்தை தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. தமிழக அரசின் உடனடி முயற்சியால் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் நிறைவடைந்து, தற்போது பெய்துவரும் மழையால் குளம் நிரம்பி உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. குளத்தை தூர்வார நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version