தொடர் மழையால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு!

தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால், சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு வெகுவாக உயர்ந்து வருகிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாத, நிலத்தடி நீர்மட்ட அளவு குறித்த விவரங்களை தற்போது காணலாம்.

 

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தேனாம்பேட்டையில், அக்டோபர் மாதத்தில் 4 புள்ளி 44 மீட்டராக இருந்த நீர் மட்டம், தற்போது 2.74 மீட்டராக உயர்ந்துள்ளது. சோழிங்கநல்லூரில், 2 புள்ளி 43 மீட்டரில் இருந்து 1. 89 மீட்டராகவும், பெருங்குடியில் 3.86 மீட்டராக இருந்த நீர்மட்டம் 2.64 மீட்டராகவும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அடையாறில், 3.92 மீட்டரில் இருந்து 2.01 மீட்டராகவும், ஆலந்தூரில் 4.45 மீட்டரில் இருந்து 2.30 மீட்டராகவும், வளசரவாக்கத்தில் 5.00 மீட்டரில் இருந்து 2.90 மீட்டராகவும் உயர்ந்துள்ளது. இதே போல், கோடம்பாக்கத்தில், 5.02 ஆக இருந்த நீர்மட்டம் 3.69 மீட்டராகவும், அண்ணா நகரில் 3.57 மீட்டராக இருந்த நீர்மட்டம் 1.70 மீட்டராகவும், அம்பத்தூரில், 5.78 மீட்டரில் இருந்து 3.56 மீட்டராகவும் உயர்ந்துள்ளது. திருவிக நகரில் 5.22 மீட்டரில் இருந்த நீர்மட்டம் தற்போது 2.56 மீட்டராகவும், ராயபுரத்தில் 6.44 மீட்டரில் இருந்து 4.89 மீட்டராகவும், தண்டையார்பேட்டையில் 6.18 மீட்டரில் இருந்து 4.81 மீட்டராகவும் உயர்ந்துள்ளது. இதேபோல், மாதவரத்தில் 4.96 மீட்டராக இருந்த நீர்மட்டம் 3.37 மீட்டராகவும், மணலியில், 3.64 ஆக இருந்த நீர்மட்டம் 2.37 மீட்டராகவும், திருவொற்றியூரில் 4.50 மீட்டரில் இருந்து 3.28 மீட்டராகவும் உயர்ந்துள்ளது.

 

கொட்டித் தீர்க்கும் பருவமழை எனும் இயற்கையின் கருணையாலும், வடிகால்வாய் தூர்வாரப்பட்டு நீர்நிலைகள் பராமரிக்கப்படும் அரசின் முயற்சியாலும், சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் அக்டோபரைக் காட்டிலும் நவம்பரில் உயர்ந்துள்ளது. இது மென்மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

 

 

Exit mobile version