வேலூர் விளாப்பக்கம் பகுதியில் குறைந்த அளவு நீரில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை மூலம், நல்ல விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கௌரி, இவர் தனது நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளார். நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும்,100 நாட்கள் பிறகு நிலக்கடலைப் பறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கௌரி கூறியுள்ளார். குறைந்த அளவு நீரில் சாகுபடி செய்யப்பட்டு வரும் இந்த நிலக்கடலை மூலம், நல்ல லாபம் கிடைப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டு பறிக்கப்படுகிற நிலக்கடலையை வியாபாரிகள் விவசாய நிலத்துக்கு வந்து நல்ல விலை கொடுத்து பெற்றுச் செல்வதாக கௌரி கூறுகிறார்.