கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி, பேரிகை, சூளகிரி ஆகிய வட்டாரங்களில் ஏராளமான விவசாயிகள் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். பருவ மழையை நம்பி நிலக்கடலையை அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டனர்.
ஆனால் எதிர்பார்த்த அளவு மழை இல்லததால் நிலக்கடலை பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.