தேசிய பத்திரிக்கையாளர் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆண்டுத்தோறும் நவம்பர் 16- ஆம் தேதி தேசிய பத்திரிக்கை தினமாக கொண்டாப்படுகிறது. நாட்டின் நான்காவது தூணாக திகழும் பத்திரிக்கைத்துறையை அடையாளப்படுத்தும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாளை தேசிய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்,
அதில் தமிழ்நாடு அரசு பத்திரிக்கையாளர் ஓய்வூதியத்தை 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், பத்திரிக்கையாளர் குடும்ப ஓய்வூதியத்தை 4,750 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும், உயர்த்தி வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் பணிகால ஆண்டு வருமானம் உச்ச வரம்புகளை 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாகவும், உயர்த்தி வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் டெல்லியில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு பத்திரிக்கையாளர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பத்திரிக்கையாளர் நல நிதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கியுள்ளது.
தமிழக அரசு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறவழியில் செயல்பட்டு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் என தெரிவித்து,மக்களுக்கு உடனுக்கு உடன் தகவல்களை கொண்டு சேர செய்யும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கு பத்திரிக்கை தின வாழ்த்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.