பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் தமிழில் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிகாலையிலேயே எழுந்து, பொங்கலிட்டு பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். உழவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் விடா முயற்சியை கொண்டாடும் நல்ல தருணம் பொங்கல் விழா என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த இனியநாளில் வளமான செழிப்பும் நலமான வாழ்வும் அனைவரும் பெற்றிட வாழ்த்துவதாகவும் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

Exit mobile version