அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில், 4 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பயன்பாட்டினை கண்டறிந்து, சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுனர்கள் மூலமாக சிகிச்சை அளிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.