விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் பச்சை பரத்துதல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. உற்சவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும்18-ம் தேதி வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு எண்ணெய் காப்பு உற்சவமும் நடைபெறுகிறது. பகல்பத்து உற்சவத்தின் போது, தன்னை நந்தவனத்தில் இருந்து எடுத்து வளர்த்த தந்தையாகிய பெரியாழ்வாரின் வீட்டிற்கு, ரெங்கமன்னருடன் ஸ்ரீஆண்டாள் வருகை தந்து சீர் வாங்கிச் செல்வது வழக்கம், அவ்வாறு வரும் போது பச்சை காய்கறிகளை பரப்பி அதை ஸ்ரீஆண்டாளும், ரெங்கமன்னரையும் பார்க்க வைத்தால், நாடு முழுவதும் பசி பட்டினி நீங்கி வளமாக இருக்கும் என்பது ஐதீகம்.
இவ்வாறு பரப்பி வைக்கப்படிருக்கும் பச்சை காய்கறிகளை பக்தர்கள் தங்களின் வீடுகளுக்கு எடுத்து சென்றால் தங்களின் வீடுகளில் செல்வம் பெருகும் என பக்தர்கள் கருதுவதால், முண்டியடித்துக் கொண்டு காய்கறிகளை எடுத்துச் சென்றனர்.