மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இருவரும், மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் அதிக தொகுதிகளை கைப்பற்றி, காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க செய்தது. மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் காந்தி நகர் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து மூத்த தலைவர் எல்கே அத்வானியை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அவரது இல்லத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர். இதையடுத்து, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியையும், அவரது இல்லத்தில் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் சந்தித்து ஆசி பெற்றனர்.