தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார். நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில்
ஐந்தாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
4 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும், 11 மாணவர்களுக்கு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டங்களையும் வழங்கினார். 48 மாணவர்களுக்கு இளநிலை மீன்வள அறிவியல் பட்டங்கள் என 63 மாணவ-மாணவியருக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.