புதுவகையான முகக்கவசத்தை தயாரித்த பட்டதாரி இளைஞர்!

நீண்ட நாட்கள் பயன்படுத்தும் வகையில் புது வகையான நவீன முகக் கவசத்தை சேலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி வடிவமைத்துள்ளார். சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான வேலாயுதம், கொரோனா பரவல் தடுப்புக்காக பயன்படுத்தப்படும் முகக் கவசத்தை நீண்ட நாட்கள்  பயன்படுத்தும் வகையில் உருவாக்க நினைத்தார். இதன்படி, முகத்துடன் பொருந்தும் பகுதி மற்றும் சுவாசத்திற்காக காற்று புகும்படி தனித்தனி பகுதிகளை அமைத்து, அவற்றிற்கு இடையில் N95 தரம் கொண்ட பஞ்சு மற்றும் துணியால் ஆன காற்று வடிப்பானை பொருத்தியுள்ளார். இந்த முகக்கவசம் மட்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் வேலாயுதம் தெரிவித்துள்ளார். இதற்கு N95 FILTER REPLACEMENT MASK என்றும் அவர் பெயரிட்டுள்ளார்.

Exit mobile version