விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இயற்கை முறையில் 7 அடி உயரம் வளரக்கூடிய பாரம்பரிய நெற்பயிரை விவசாயம் செய்து சாதனை படைத்த பொறியியல் பட்டதாரி இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செஞ்சி அருகேயுள்ள மேல்பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கல்லூரி படிப்பு முடித்தவுடன் 10 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இயற்கை முறையில் பாரம்பரிய நெல் பயிர்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகச்சம்பா உள்ளிட்ட ஐந்து வகையான பாரம்பரிய நெற்பயிர்களை அருண்பாண்டியன் பயிரிட்டு வருகிறார். இதில் சுமார் 7 அடி வரை உயரம் வளரக்கூடிய பாரம்பரிய நெற்பயிர்களை செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் முதல் முறையாக விவசாயம் செய்து அவர் சாதனை படைத்துள்ளார். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாகவும், தற்போது, 80 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும் பட்டதாரி இளைஞர் அருண்பாண்டியன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.