சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏனபுரம் கிராமத்தில், விவசாயத்தில் ஆர்வம் கொண்ட பட்டதாரி இளைஞர் ஒருவர், குறைவான பாசன நீரைக்கொண்டு கடலை சாகுபடியில் அசத்தி வருகிறார்.
சிவகங்கைக்கு அருகில் உள்ளது ஏனபுரம் கிராமம். இந்த கிராமத்தில் பட்டப்படிப்பு படித்த இளைஞர் துரைப்பாண்டி, தன்னிடம் உள்ள 4 ஏக்கர் நிலத்தில், கடலை விவசாயம் செய்து வருகிறார். இவரது கிராமம் வானம் பார்த்த பூமி என்பதால், ஆழ்துளை கிணற்றின் மூலம் பெறப்படும் குறைவான அளவு பாசன நீர் மூலமாகவே கடலை பயிரிட்டு, நல்ல லாபம் ஈட்டி வருகிறார். தன்னை போல் மற்ற இளைஞர்களும், படித்துவிட்டு வேலையின்றி இல்லாமல், தங்களிடம் உள்ள நிலத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு லாபம் ஈட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.