நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% குறையும்- மத்திய அரசு

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த 2018-19 நிதியாண்டில் 6.2 சதவீதமாக காணப்பட்ட தயாரிப்பு துறையின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், நடப்பு 2019-20 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என்றும்,  இது, முந்தைய நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருந்தது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. வேளாண்துறை கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம் போன்ற துறைகளின் வளர்ச்சியில் சரிவு காணப்பட்டுள்ள போதிலும், சுரங்கம், பொது நிர்வாகம், பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளில் சிறிய வளர்ச்சி தென்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version