பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுறையாளர் தேர்வில், 1 லட்சத்து 33 ஆயிரத்து 169 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அதில், 2 ஆயிரம் பேரை தேர்ந்தெடுத்து சன்றிதழ் சரிபார்ப்பிற்காக தமிழக அரசு அழைத்திருந்தது. பின்னர், 196 பேர் தேர்வில் முறைகேடாக செயல்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்த வழக்கை, உயர்நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஷ்வர ராவ் மற்றும் ஹேமெண்ட் குப்தா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.