விபத்தில் சிக்கி கோமாவிலிருந்து குணமாகிய கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கபடி வீராங்கனை, தனது மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் காட்டு வீதியை சேர்ந்தவர் கபடி வீராங்கனை சந்தியா. மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வாங்கிய அவர், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் சிக்கி கோமாவிற்கு சென்றார். தற்போது கோமாவிலிருந்து குணமான சந்தியாவை, பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஏழ்மையில் வாடும் தனக்கு தமிழக அரசு உதவ வேண்டுமென சந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.