60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சிறப்பு நிதி உதவி பெறும் பயனாளிகளை கணக்கெடுப்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தெரிவித்துள்ளது. பயனாளிகளை கணக்கெடுத்தல், புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்தல், கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டும், சென்னை மாநகாரட்சியில் அதன் ஆணையர் தலைமையிலும் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.