தப்பியது ராஜஸ்தான் அரசு – சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் கெலாட் வெற்றி!

வலிமையான வீரனை எல்லைக்கு அனுப்புவது போல காங்கிரஸ் தன்னை அனுப்பியுள்ளதாக ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் அம்மாநில சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் இருவரும் இணைந்ததை அடுத்து அம்மாநில சட்டமன்றம் இன்று கூடியது. முதலமைச்சர் அஷோக் கெலாட் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. அப்போது பேசிய முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், நாங்கள் ஒன்றுபட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், தனது இருக்கை தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்குமான எல்லையில், தனது இருக்கை இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், வலிமையான வீரனை எல்லைக்கு அனுப்புவது போல காங்கிரஸ் தன்னை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், நாங்கள் 125 பேரும் பாதுகாப்பு கவசமாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version