50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கோவை அடைந்துள்ளது-அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான பணப் பலன்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சென்னையை போல் கோவையிலும் சிற்றுந்து இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் சிற்றுந்து இயக்கப்படும் என்று கூறினார். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி கோவைக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

Exit mobile version