ஆக்சிஜன் இறக்குமதிக்கு 3 மாதங்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இது பற்றி ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில் அனைத்து அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.
இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் தயாரிப்பு தொடர்பான பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி மற்றும் சுகாதார வரியில் இருந்து 3 மாதங்களுக்கு விலக்கு அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.