டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி துணை ஆறுகளை மேம்படுத்த, 3 ஆயிரத்து 159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15-க்கும் மேற்பட்ட காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த 3 ஆயிரத்து 159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பருவமழையின் போது, காவிரியில் இருந்து வெளியேறும் நீர் சேமிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. துணை ஆறுகளில் தடுப்பணைகள், மதகுகள், உள்ளிட்டவைகளும் இந்த நிதியில் அமைக்கப்பட இருப்பதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கியின் உதவியுடன், இந்த பணிகள் அனைத்தும் இரண்டு ஆண்டு காலத்திற்குள் முடிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.