தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது?

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர், தமிழ் இனிமையான மொழி என்று புகழாரம் சூட்டி வணக்கம் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், அனைத்து தரப்பு மக்களுக்கான அரசாக இந்த அரசு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இந்த அரசு இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் ஆளுநர் தமது உரையில் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கூடுதலாக வழங்க வேண்டுமென்றும், அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆளுநர் வலியுறுத்தி இருக்கிறார்.

இதனிடையே வரும் 24 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும். 24 ஆம் தேதியன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version