ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக சுதந்திர தின கொண்டாட்டம்: ஆளுநர் தேசிய கொடியேற்றினார்

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், முதல் முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் உரையாற்றிய அவர், மத்திய அரசு கொண்டு வந்த மாற்றங்கள் வெறும் வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமல்ல, 370 சட்டப்பிரிவு நீக்கம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சிக்கு புதிய கதவை திறந்து விட்டுள்ளதாக தெரிவித்தார். மக்கள் உற்சாகமாக தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி சுதந்திர தின கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டனர்.

தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக் பகுதியில் 73-வது சுதந்திரம் தினம் கொண்டாடப்பட்டது. 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்பு முதல் முறையாக கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். லடாக் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜம்யாங் செரிக் நம்ஜியால் உற்சாகமாக நடமாடின கொண்டாடினார். மாணவ மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Exit mobile version