தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மூத்த குடிமக்களை குடும்பத்தார் கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டுமென கூறியுள்ள ஆளுநர், மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தகுதியுடைய நபர்கள், தவறாமல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென்றும், பொது இடங்களில் பாதுகாப்பான இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டுமென்றும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.