ஆண்டின் முதலாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.
பேரவை கூடியதும், உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழில் காலை வணக்கம், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஆளுநர் தனது உரையை துவக்கினார். புத்தாண்டு தமிழக மக்களுக்கு பல்வேறு வளங்களையும் நலங்களையும் தரவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பொற்கால ஆட்சியை தந்தவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டிய அவர், அந்த ஆட்சி தற்போதும் தொடர்வதாக புகழாரம் சூட்டினார்.
கஜா புயல் போன்ற பேரிடரின் போதும் தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற முடியவில்லை என்று ஆளுநர் தெரிவித்தார். தமிழக அரசுக்கு நிதியை உடனடியாக வழங்க மத்திய அரசை அவர் வலியுறுத்தினார்.
மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்த அவர், திட்ட அறிக்கை தயாரிக்க அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொங்கல் பரிசாக திருவாரூர் மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்தார்.