தமிழ் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் நினைத்து நாம் பெருமையடைய வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கு தன்னுடைய இதயங்கனிந்த பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இந்த நன்நாளில் நமக்கு அருள் பொழியும் சூரிய கடவுளுக்கு இயற்கையோடு இணைந்து நன்றி செலுத்த வேண்டும் என்றும், மேலும் நாம் அனைவருமே நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை நினைத்து பெருமைப்பட வேண்டும் என்றும், அது எப்போதும் நம்மை உயரத்தில் வைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.