18 ஆண்டுகள் சிறையிலிருந்த 3 பேர் விடுதலை – நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க ஆளுநர் ஒப்புதல்

நன்னடத்தை அடிப்படையில் 18 வருடங்கள் சிறையில் இருந்த 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டு தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில், நெடுஞ்செழியன்,மது, முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீட்டு வழக்கில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நன்னடத்தை காரணமாக அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

 

Exit mobile version