பேரிடரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஏழரைக் கோடி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தமிழக அரசின் இலக்கு என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற முகாமை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பேரிடர் காலங்களில் நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துகளை முழுமையாக தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.