கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் உயர் அதிகாரிகளாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க 10 மருத்துவர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார். குழந்தைக்கு 100 சதவீதம் எச்.ஐ.வி தொற்று ஏற்படாமல் இருக்க உரிய சிகிச்சை அளித்து வருவதாக சுட்டிக் காட்டிய அவர், வாழ்வாதாரத்திற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.