மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படுமா? என்பது குறித்து, ஆளுநரிடம் ஒப்புதல் பெறும் கால அளவைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு நிலையத்தில், “தேசிய தன்னார்வ ரத்ததான நாள் – 2020” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.6 சதவீதத்தில் இருந்து, 1.3 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு குறித்து ஆளுநரின் ஒப்புதலை பொருத்தே முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.