இந்திய பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசு முறைச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
இந்திய பிரதமராக பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாடு சுற்றுப்பயணமாக அண்டை நாடான மாலத்தீவுக்கு மோடி பயணம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று இலங்கைக்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்ஹே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகேந்திர ராஜபக்சே ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மோடியை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றத்திற்கு பின்பாக அங்கு செல்லும் முக்கிய தலைவர் மோடி என்று குறிப்பிடத்தக்கது.