கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை

நாகை மாவட்டம் கோடியக்கரை வன சரணாலயத்தின் அருகில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் மற்றும் 8 வன விரிவாக்க மையங்களை நவீனப்படுத்தவும், தமிழக அரசு 4 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணைகளை வெளியிட்டுள்ளது.

நாகை மாவட்டம் கோடியக்கரை வன சரணாலயத்தின் அருகில் கடல் ஆமை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த முப்பரிமாண அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் கிடைக்கப்பெறும் மின்சாரத்தை பயன்படுத்தி, நவீன வசதிகளுடன் கூடிய கடல் ஆமை பாதுகாப்பு மையமும் அங்கு அமைக்க உள்ளது. இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Exit mobile version