வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

உள்நாட்டுச் சந்தையில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த, வெளிநாட்டுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெங்காயப் பயிர் அழுகிப் போய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உள்நாட்டுச் சந்தையில் வெங்காய விலையைக் கட்டுப்படுத்த, அனைத்து வகை வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடையானது நீடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version