தூத்துக்குடி மாவட்டத்தில், கடும் கடல் சீற்றம் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில், கடும் காற்று மற்றும் கடலின் சீற்றம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை கடந்த 2 தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
இதனால், தூத்துக்குடியில் 270க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3வது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. 3 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் தங்களது வாழ்வாதராம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மீனவர்கள், இதற்காக நிவாராணத்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.