+2 தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகள் 84.76 சதவீதம் தேர்ச்சி

பள்ளிகள் வகைப்பாடுகள் வாரியான தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகள் 84.76 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசுப் பள்ளிகள் 84 புள்ளி 76 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 93. 64 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. மெட்ரிக் பள்ளிகள் 98.26 சதவீதமும், இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 91.67 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் மட்டும் பயின்ற பள்ளிகளில் 93.75 சதவீதமும், ஆண்கள் மட்டும் பயின்ற பள்ளிகளில் 83.47 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள மேல்நிலை பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 83 ஆகும், இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 281 ஆகும்.

Exit mobile version