அரசு பள்ளி மாணவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பு!

முதலமைச்சர் அறிவித்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில், 10 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் தேர்வு செய்யப்பட்ட 10 அரசு பள்ளி மாணவர்கள் கரூர் மருத்துவ கல்லூரியில், கல்லூரி முதல்வர் முன்னிலையில் சேந்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்வது என்பது பெரிய கனவாக இருந்ததாகவும், அதை முதலமைச்சரின் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நல்ல வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறிய அவர், பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாகக் கொள்ளாமல், சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Exit mobile version