காய்கறிகள், பழங்களை கொண்டு இந்திய வரைபடத்தினை வரைந்து அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவிகள் இணைந்து, இந்திய தேசிய வரைபடத்தை, ஒவ்வொரு மாநிலங்களில் விளையும் பிரசித்தி பெற்ற காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற பொருட்களைக் பயன்படுத்தி , இரண்டு மணி நேரத்தில் வரைந்து சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை முயற்சி கலாம் புக்ஸ் ஆஃ ரெக்கார்டு சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அரசு பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்ச்செல்வி என்ற அரசு பள்ளி விலங்கியல் ஆசிரியை, இந்த சாதனைக்கு செலவாகிய மொத்த தொகையான 80 ஆயிரத்தை தன் சொந்த பணத்திலிருந்து தந்துள்ளார். இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.