திருப்பூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டியதாக கூறப்படும் தலைமையாசிரியைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வருவாய்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து நம்பியாம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படு வருகிறது. இப்பள்ளியில், 190 மாணவ, மாணவியர் பயின்று வரும் நிலையில், வளாகத்திற்குள் பழமையானவாகை மரங்களின் கிளைகள் படர்ந்து இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், மரங்கள், எவ்வித அனுமதியுமின்றி, வெட்டி சாய்க்கப்பட்டதாக தெரியவருகிறது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த வருவாய் துறையினர்,அனுமதியின்றி மரத்தை வெட்டியது, சட்டப்படிதவறு என எச்சரித்ததுடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.