அரசு பெட்ரோல் பங்கில் புதுச்சேரி அமைச்சர் காருக்கு டீசல் போட மறுப்பு

காரைக்காலில், அமைச்சரின் காருக்கு  பெட்ரோல் பங்கில் கடன் பாக்கி இருந்ததால் ஊழியர்கள் டீசல் வழங்க மறுத்ததை அடுத்து அவர் பேருந்தில் புதுச்சேரிக்கு  பயணம் மேற்கொண்டார்…

புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனின் காருக்கு அரசு பெட்ரோல் பங்க்-ல் கடன் பாக்கி இருந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது காருக்கு காரைக்காலில் உள்ள அரசு சார்ந்த நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்-ல் டீசல் நிரப்ப சென்ற போது கடன் பாக்கியால் ஊழியர்கள் டீசல் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால்   தனது காரை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நிறுத்திவிட்டு, அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, அவர் அரசு பேருந்தில் ஏறி புதுச்சேரிக்கு சென்றுள்ளார் .இதுமட்டுமல்லாது, புதுச்சேரி அரசு  கடுமையான நிதி நெருக்கடியில் திணறுவதாகவும், அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு  முறையாக சம்பளம் வழங்குவதில்லை  என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version