சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம் குறித்த அரசாணை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையில், எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என தமிழக அரசால் அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான அரசாணையை தற்போது, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சகமும் அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version