அரசு அலுவலரின் வீட்டில் 112 சவரன் நகை, பணம் கொள்ளை

பெரம்பூரில் வீட்டின் கதவை உடைத்து 112 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

சென்னை பெரம்பூரை அடுத்த பெரியார் நகரைச் சேர்ந்தவர் தங்கவேலு. ஓய்வு பெற்ற அரசு அலுவலரான இவர், தனது மகளின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக வெளியூர் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் திருமணத்திற்கு வைத்திருந்த 112 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டின் பின்புற கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version