சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு வலியுறுத்தல்!!

வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ஹர்மந்தர் சிங், இ-பாஸ் பெற்று சென்னை வரும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அலுவர்களுக்கு அறிவுறுத்தினார். குறிப்பாக தொழிற்சாலை மற்றும் இதர அலுவலகங்களின் பணி காரணமாக வரும் நபர்களின் தகவல்களை, மண்டல அலுவலர்கள் சேகரித்து மாநகராட்சி அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், இதைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version