40ஆண்டுகளாக பராமரிக்கப்படாத ஊரணியை மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் தூர்வாரிய தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இயற்கை வளங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களையும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியினை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மதுரை மாவடம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஊரணியானது 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாரப்படாமல் புதர் மண்டி கிடந்தது. தற்போது தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஊரணியானது தூர்வாரப்பட்டு மழை நீரை சேகரிக்கும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு விவசாயிகளும், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.