கடலூரில் தமிழக அரசு சார்பில் ராமசாமி படையாட்சியாருக்கு அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை சட்டத்துறை அமைச்சர்
சி.வி. சண்முகம் ஆய்வு செய்தார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதிக்காகப் பாடுபட்டவருமான ராமசாமி படையாட்சியாருக்கு கடலூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மஞ்சக்குப்பத்தில் 1 ஏக்கர் 70 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு, 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மணிமண்டபம் மற்றும் நூலகம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வரும் 25ம் தேதி முதலமைச்சர் மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மணிமண்டபத்தின் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் எம்.சி. சம்பத், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.